தென்காசி மாவட்டம் மேலப்பட்டாக்குறிச்சியில் மூதாட்டி ஒருவரின் 110 வது பிறந்தநாள் விழாவை உறவினர்களும், ஊர் மக்களும் உற்சாகமாக கொண்டாடினர்.மேள, தாளம் முழங்க ஆடல், பாடலுடன் வெகு விமரிசையாக கொண்டாடி மகிழ்ந்தனர். வள்ளியம்மாள் என்பவரின் மகன்கள், மகள்கள், பேரன்கள், பேத்திகள் என ஐந்து தலைமுறை வாரிசுகள் ஒன்றிணைந்து, பெரிய கேக்கை வெட்டி மூதாட்டிக்கு ஊட்டி, பரிசுகளை வழங்கி மகிழ்ந்தனர்.தள்ளாடும் வயதிலும் மூதாட்டி வள்ளியம்மாளை தாங்கள் ஒன்றிணைந்து பாதுகாத்து வரும் நிலையில், இதே போல் நாட்டில் உள்ள அனைவரும் தங்களது வீட்டில் உள்ள முதியவர்களை குறை கூறாமல் பாதுகாக்க வேண்டும், அவர்களை முதியோர் காப்பகத்திற்கு அனுப்புவதன் மூலம் தங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷத்தை சிலர் இழக்கின்றனர் என்றும் தெரிவித்தனர். முதியோர்களை நமது தெய்வம் போல் கருதி அவர்களை பாதுகாக்க வேண்டும் என்றும், வள்ளியம்மாளின் உறவினர்கள் கேட்டுக்கொண்டனர்.