தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் தனியார் மருத்துவமனையில் தாயும், சேயும் உயிரிழந்த நிலையில், உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டனர். ராஜம் மருத்துவமனையில் துவரங்குறிச்சியை சேர்ந்த சந்தியா என்ற பெண் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். குழந்தை இறந்து பிறந்ததால், அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட தாயும் உயிரிழந்தார்.