கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் திமுக பகுதி செயலாளரை கைது செய்யக் கோரி ஏராளமானோர் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.ஓசூரில் திமுக பகுதி செயலாளர் ராமுவின் காரை டிப்பர் லாரி உரச வந்ததாக கூறி அவரும், சகோதரர் நாகராஜூம் இணைந்து லாரி ஓட்டுநரை தாக்கிவிட்டு சாவியை பறித்து சென்றதாக கூறப்படுகிறது.பின்னர் சாவியை வாங்க சென்றவர்களையும் அவர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது.இதனையடுத்து வன்கொடுமை சட்டத்தின் கீழ் திமுக பகுதி செயலாளர் தரப்பினரை கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள், நண்பர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.