தமிழகத்தில் திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்த எப்போதும் அனுமதி அளிக்கப்படுவதாகவும் ஆனால் பாஜக மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு அனுமதி இல்லை எனவும் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார். கோவை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் முதலமைச்சர் தலைமையில் சர்வாதிகார ஆட்சி நடைபெறுகிறது என்றார். கருத்து சுதந்திரத்தை திமுக அரசு பறிக்கிறது எனவும் தமிழகத்தில் ஜனநாயகம் என்பதே இல்லை எனவும் அவர் குற்றம்சாட்டினார்.