சேலம் மாவட்டம் ஆத்தூரில் அரசு பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை கொடுத்த வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் அலுவலக உதவியாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த வட்டார வளர்ச்சி அலுவலர் பரமசிவம் , அலுவலக உதவியாளர் கணேசன் ஆகிய இருவரும், அங்கு பணிபுரிந்து வரும் முன்கள பெண் ஊழியருக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.