சென்னையில் சினிமா உதவி இயக்குநரை கடத்தி சென்று பைக் மற்றும் செல்போன் பறித்த வழக்கில் இருவரை போலீஸார் கைது செய்தனர். அசோக் நகரை சேர்ந்த உதவி இயக்குநர் தர்ஷன் என்பவரிடம், அவரது நண்பர் சுதிர்ஈஸ்வர் மது அருந்துவதற்கு பணம் கேட்டுள்ளார். தர மறுத்ததால், ஆத்திரம் அடைந்த அவர் தனது நண்பர்களுடன் உதவி இயக்குநரை ஆட்டோவில் கடத்தி சென்று தாக்கி, செல்போன் மற்றும் பைக்கை பறித்துள்ளனர்.