விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் பட்டாக்கத்தியுடன் ரீல்ஸ் வெளியிட்ட இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர். திண்டிவனத்தை சேர்ந்த லோகேஷ் என்ற பெயரிலான இன்ஸ்டா பக்கத்தில் இந்த ரீல்ஸ் வெளியிடப்பட்டது. இரண்டாம் ஆண்டு கல்லூரி மாணவரான லோகேஷ் தன்னை ஒரு ரவுடி போல் காட்டி கொள்வதற்காக பட்டாக்கத்தியுடன் ரீல்ஸ் வெளியிட்ட தாக கூறப்படுகிறது.