திருச்சியில் பெண்கள் மற்றும் பொது மக்களை அச்சுறுத்தும் வகையில் பைக் சாகசம் செய்து ரீல்ஸ் வெளியிட்ட கல்லூரி மாணவர் கைதுக்கு பின் மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்டதோடு இனி இதுபோன்ற தவறை யாரும் செய்யவேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளார். திருச்சி மாநகர் புத்தூர் மூலக்கொல்லை தெருவை சேர்ந்த சீனி ரியாஸ் அங்குள்ள கல்லூரியில் பி.காம் படித்து வரும் நிலையில், வாகன நெரிசல் மிகுந்த சாலையில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பைக்கை வேகமாக ஓட்டி செல்வது, பள்ளி கல்லூரி மாணவிகள் முன் பைக் சாகசம் செய்து இன்ஸ்டாவில் ரீல்ஸ் வெளியிட்டது உள்ளிட்ட புகாரில் அவர் கைதாகியிருந்தது குறிப்பிடதக்கது.