சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் பூ வியாபாரி தவறவிட்ட 25 ஆயிரம் ரூபாய் பணப் பையை குப்பைத் தொட்டியில் இருந்து கண்டெடுத்த தூய்மை பெண் பணியாளர்கள், அதனை உரியவரிடம் ஒப்படைத்தனர். திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் அருகே பூ வியாபாரம் செய்து வரும் அஸ்வினி என்பவர், 25 ஆயிரம் ரூபாய் பணப் பையை தவற விட்டார். இதுகுறித்து, அப்பகுதியில் துாய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த நீலாவதி, தேவி ஆகியோரிடம் தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவர்கள், குப்பை தொட்டியை கவிழ்த்து சோதனை செய்தபோது பணப்பை கிடைத்தது. பின்னர், அந்த பணத்தை பூ வியாபாரியிடம் அதிகாரிகள் முன்னிலையில், தூய்மைப் பணியாளர்கள் ஒப்படைத்தனர்.