கோவையில் பல்வேறு பகுதிகளில் திருடப்பட்ட மற்றும் தொலைந்து போன சுமார் 48 லட்சம் ரூபாய் மதிப்பிலான 252 செல்போன்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் உரியவர்களிடம் ஒப்படைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், கோவையில் கடந்த 15 நாட்களில் மட்டும் போதைப் பொருட்கள் விற்பனை செய்ததாக 176 கடைகளுக்கு சீல் வைத்திருப்பதாகவும், கல்லூரிகளில் மாணவர்களிடையே போதைப்பொருள் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.