கன்னியாகுமரியில் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட கர்ப்பிணியின் இறப்பில் மர்மம் இருப்பதாக கூறி, காவல்துறையினரிடம் அவரது உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மரக்குடி தெருவை சேர்ந்த ஆபிரகாமின் மனைவி ஜெனிபர் இரண்டாவது முறையாக கர்ப்பம் தரித்த நிலையில், வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கிட்டு உயிரை மாய்த்ததாக கூறப்படுகிறது.