திருவாரூர் மாவட்டம் கொடிக்கால்பாளையத்தில் உள்ள முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசலில் மத நல்லிணக்க பாச்சோறு திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. திருச்சி, தஞ்சை, நாகை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான இஸ்லாமியர்கள் மற்றும் இந்துக்கள் தங்களது வீட்டில் சர்க்கரை பொங்கலை சமைத்து எடுத்து வந்து பள்ளிவாசலில் வைத்து பாத்தியா ஓதி வழிபட்டனர்.