காஞ்சிபுரம் மவாட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ரெடிமிக்ஸ் லாரி கட்டுபாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. காஞ்சிபுரத்திலிருந்து தாம்பரத்திற்கு சென்று கொண்டிருந்த ரெடிமிக்ஸ் லாரி, ஸ்ரீபெரும்புதூர் அருகே சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து குன்றத்தூர் சாலைக்கு செல்வதற்காக திரும்பியபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது. இதில் ஓட்டுநர் உயிர் தப்பிய நிலையில் லாரியின் இன்ஜினிலிருந்து கிளம்பிய புகையால் பதற்றம் நிலவியது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில் ஜேசிபியின் உதவியோடு லாரியை மீட்கும் பணி நடைபெற்றது.