எந்த மருத்துவமனையில் மருத்துவர் பற்றாக்குறையால் இறப்பு ஏற்பட்டது என்பது குறித்து புள்ளி விவரங்களோடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தால், அவருடன் நேருக்கு நேர் விவாதிக்கத் தயார் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் சவால் விடுத்துள்ளார். சென்னை சைதாப்பேட்டையில் பேட்டியளித்த அவர், திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் மருத்துவர் இல்லாமல் குழந்தை உயிரிழக்கவில்லை என்றார்.