பாமகவின் மாநில துணைத்தலைவராக முன்னாள் எம்எல்ஏ ரவிராஜை, அக்கட்சி நிறுவனர் ராமதாஸ் நியமனம் செய்துள்ளார். ராமதாஸ் மற்றும் அன்புமணிக்கு இடையே மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில், கட்சியின் மூத்த நிர்வாகிகள் அவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே ராமதாஸ் இதுவரை 37 மாவட்ட செயலாளர்கள் மற்றும் 17 மாவட்ட தலைவர்களை மாற்றம் செய்துள்ளார். தற்போது, பாமகவிலிருந்து பாஜகவிற்கு சென்று மீண்டும் திரும்பிய ரவிராஜ்க்கு மாநில துணைத் தலைவர் பதவி வழங்கி உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில், அன்புமணியால் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட கரூர் மாவட்ட செயலாளர் பாஸ்கரன், தன்னை நீக்கும் அதிகாரம் ராமதாஸ்க்கு மட்டுமே உள்ளதாகவும், தான் பதவியில் தொடர்வதாகவும் தெரிவித்துள்ளார்.