தென்காசி மாவட்டம் கடையம் அருகே நியாயவிலை கடையில், பொதுமக்கள் கண்முன்னே கள்ளச்சந்தையில் ரேஷன் அரிசி விற்பனை செய்யப்படும் வீடியோ வெளியாகியுள்ளது. இரு இளைஞர்கள் ரேஷன் கடைக்குள்ளேயே சென்று இரண்டு மூட்டைகளில் அரிசியை எடுத்துச் செல்கின்றனர். அதிகபட்சமாக ஒரு குடும்ப அட்டை தாரருக்கு 25 கிலோ அரிசிக்கு மேல் வழங்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.