சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டி பைபாஸ் மாருதி ஷோரூம் அருகில் ராம்ராஜ் காட்டன் நிறுவனம் தனது புதிய ஷோரூமை துவங்கி உள்ளது. இந்த புதிய கிளையை சேலம் அர்த்தநாரி லூம் சென்டர் நிர்வாக இயக்குநரும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு நிறுவன உறுப்பினருமான அழகரசன் திறந்து வைத்தார். திறப்பு விழாவிற்கு வருகை தந்தவர்களை ராம்ராஜ் காட்டன் நிறுவனத்தின் இணை நிர்வாக இயக்குநர் அஸ்வின் வரவேற்றார்.