மன்னார் கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேரை, இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். ராமேஸ்வரம் மீன் பிடி துறைமுகத்திலிருந்து ஆரோக்கிய டேனியல் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் 7 மீனவர்கள், உரிய அனுமதிச் சீட்டு பெற்று கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். தனுஷ்கோடி தலைமன்னார் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, திடீரென அப்பகுதிக்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி 7 மீனவர்களையும் கைது செய்து மன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.