இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி, வரும் 28-ம் தேதி முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்போவதாக ராமேஸ்வரம் மீனவர்கள் அறிவித்துள்ளனர். இது தொடர்பாக ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தில் நடைபெற்ற மீனவர்கள் ஆலோசனைக் கூட்டத்தில், இலங்கை அரசின் அத்துமீறிய செயல்கள் நிரந்தரமாக நிறுத்தப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.