ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோவிலில் ஒரு கோடியே 60 லட்சத்து 32 ஆயிரம் ரூபாய் உண்டியல் காணிக்கையாக கிடைத்துள்ளது. திருக்கோயில் மண்டபத்தில் கோவில் இணை ஆணையர் சிவராம்குமார் முன்னிலையில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்ற நிலையில், 63 கிராம் தங்கமும், 8 கிலோ 150 கிராம் வெள்ளியும் காணிக்கையாக கிடைத்திருப்பதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.