பாமக பிரமுகர் ராமலிங்கம் கொலை வழக்கில் கைதான 14ஆவது நபரை ஐந்து நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.14ஆவது நபராக கைது செய்யப்பட்ட இம்ததுல்லா என்பவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க என்.ஐ.ஏ. அதிகாரிகள் பூந்தமல்லியில் உள்ள தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தனர். மனுவை விசாரித்த நீதிபதி மலர்விழி, இம்ததுல்லாவை 5 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி அளித்தார்.