கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ஓணம் பண்டிகையை கொண்டாடிய மாணவர்கள் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாட்டிற்கு ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கினர். கேரளாவின் பாரம்பரிய திருவோணம் வருகிற 15 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் மாணவர்கள் ஓணம் பண்டிகையை கொண்டாடினர். வயநாடு நிலச்சரிவை நினைவு கூறும் வகையில், பெரிய கொண்டாட்டங்கள் இல்லாமல், பூ கோலமிட்டு, ஓரிரு கலை நிகழ்ச்சிகளுடன் ஓணம் பண்டிகையை கொண்டாடினர்.