அன்புமணி மீதான குற்றச்சாட்டுகளுக்கு நேரிலோ அல்லது கடிதம் மூலமாகவோ விளக்கமளிக்க வேண்டும் என்று, பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில், அன்புமணி மீது 16 குற்றச்சாட்டுகளை, பாமக முன்வைத்து வரிசைப்படுத்தியது.இந்த நிலையில், அன்புமணி மீதான குற்றச்சாட்டுகளுக்கு என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்ற கேள்வி ராமதாஸ் ஆதரவு பாமக தொண்டர்களிடம் எழுந்தது. இதற்கு விளக்கமளிக்கும் வகையில் தைலாபுரத்தில், செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ் கூறியதாவது:அன்புமணி மீது முன்வைக்கப்பட்ட 16 குற்றச்சாட்டுகளை விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்க, கட்சியின் அமைப்பு விதி எண் 23ன் படி ஒழுங்கு நடவடிக்கை குழு அமைக்கப்பட்டது. இதன் அடிப்படையில், இந்தக் குழுவின் விசாரணை அறிக்கை கடிதம், செயல் தலைவர் அன்புமணிக்கு அனுப்பி வைப்பதென முடிவு செய்யப்பட்டது.இந்த விசாரணை அறிக்கைக்கான விளக்கம் மற்றும் ஆவணங்கள் இருந்தால் அவற்றை ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் நேரிலோ அல்லது மேற்கண்ட முகவரிக்கு கடிதத்தின் வாயிலாகவோ சமர்ப்பிக்கப்பட வேண்டும்இவ்வாறு ராமதாஸ் தெரிவித்தார்.