பாமகவில் ராமதாசுக்கும் அவரது மகன் அன்புமணிக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வரும் சூழலில், நீண்ட நாட்களுக்கு பிறகு இருவரும் நேருக்கு நேர் சந்தித்து கொண்ட சம்பவம் கட்சியினரிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. தாயார் சரசுவதி பிறந்த நாள் கொண்டாட்டத்திற்காக மனைவி, மகள்கள் மற்றும் பேரன் பேத்திகளுடன் தைலாபுரம் சென்ற அன்புமணி, தாய்க்கு கேக் ஊட்டி வாழ்த்துகளை கூறினார். அதுமட்டுமின்றி, தனது அக்கா ஸ்ரீ காந்தியுடனும் அன்புமணி பேசி மகிழ்ந்ததோடு, குடும்பத்தினருடன் சிறிது நேரம் செலவிட்டு பின் மீண்டும் சென்னை திரும்பினார். தந்தை மகன் மோதலுக்கிடையே நிகழ்ந்துள்ள இந்த சந்திப்பு இருவரது இணைப்புக்கும் வித்திடும் என பாமகவினர் எதிர்பார்க்கின்றனர்.