நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரிக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று வருகிறார். அங்குள்ள போர் நினைவுத் தூணில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தும் அவர், ராணுவ அதிகாரிகளுடன் உரையாடுகிறார். மத்திய அமைச்சரின் வருகையையொட்டி, வெலிங்டன் ராணுவ பகுதியை பொலிவுபடுத்தும் பணி தீவிரமாக நடைபெற்றது.