சென்னை ராஜீவ் காந்தி அரசு தலைமை மருத்துவமனை கழிவறைகள் உள்ளிட்ட இடங்கள், சுத்தமில்லாமல் இருந்ததாக நியூஸ் தமிழ் தொலைக்காட்சியில் செய்தி வெளியான நிலையில், அதனை சுத்தம் செய்யும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டனர். நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் இடத்தில், கழிவறைகள் உள்ளிட்ட இடங்கள் சுத்தம் இல்லாமல் இருந்தன.