மதுரையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்பதாக வெளியான செய்தி உண்மை அல்ல என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ரஜினிகாந்தின் செய்தி தொடர்பாளர் ரியாஸ் அகமது வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், மதுரையில் நடைபெற இருக்கும் முருகன் பக்தர்கள் மாநாட்டில் ரஜினிகாந்த் கலந்து கொள்கிறார் என்று உலா வரும் செய்தி பொய்யானது என்று விளக்கம் அளித்துள்ளார்.இதையும் படியுங்கள் : கட்சிக்கு 12 எம்.எல்.ஏ.க்கள் தேவை - துரை வைகோ..