ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவிடாமல் திமுக மிரட்டியது என ஆதவ் அர்ஜுனா கூறியது கற்பனை என்று, திருமாவளவன் கூறி உள்ளார். ஆசை காட்டி அரசியலுக்குள் இழுக்க முடியாதுஇதுதொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியதாவது:ரஜினிகாந்த அரசியலுக்கு வரக்கூடாது என, திமுக மிரட்டியது எனக் கூறி இருப்பது அவருடைய கற்பனை என நினைக்கிறேன். ரஜினி ஆர்வம் காட்டக்கூடியவர் அல்ல, மயங்கக்கூடியவர் அல்ல. வெளியேறி விட்டார், விலகி நிற்கிறார். அவரை ஆசை காட்டி அரசியலுக்குள் இழுக்க முடியாது. அச்சுறுத்தி வெளியேற்றவும் முடியாது என்ற நிலையை எட்டிவிட்டார் என நான் நினைக்கிறேன். ரஜினி என்ற ஆளுமையை கொச்சைப்படுத்தக் கூடிய அளவுக்கு பேசியது தவறு.தொகுதிப் பங்கீட்டு நிலவரம் திமுக கூட்டணியில், எத்தனை தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்படும் என்பதை பேச்சுவார்த்தை முடிந்த பிறகு முறைப்படி அறிவிக்கிறோம். புதிதாக கட்சி தொடங்கி இருக்கிற சசிகலாவுக்கு என்னுடைய வாழ்த்துக்கள், அரசியல் ரீதியாக என்ன முடிவெடுக்க போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். திமுக கூட்டணியை எதிர்த்து அரசியல் செய்யக்கூடிய கூட்டணி இன்னும் உருவாகவில்லை. அதிமுக சிதறி இருக்கிறது. திமுகவை எதிர்க்கக்கூடிய கூட்டணி இன்னும் உருவாகவில்லை.மானாமதுரை சம்பவம் மானாமதுரையில் இளைஞர் ஆகாஷ் படுகொலை செய்யப்பட்டு இருக்கிறார். அதில் தொடர்புடையவர்களை, கைது செய்ய வேண்டும். ஆகாஷ் மரணத்திற்கு நீதி கேட்டு உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விசிக சார்பாகவும் போராட்டம் நடைபெற்று வருகிறது. ஆகாஷ் படுகொலையில் தொடர்புடைய காவலர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்கள் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு தொகை வழங்குவதோடு குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.தூத்துக்குடி சம்பவம் தூத்துக்குடி அருகே பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தபட்டு கொலை செய்யப்பட்டிருக்கிறார். இந்த கொடுஞ்செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து, கடுமையான தண்டனை வழங்க வேண்டும். அந்த சிறுமியின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என முதல்வரிடம் வலியுறுத்தி இருக்கிறேன்.விசிக கோரிக்கை ஈரான் - அமெரிக்கா போரை நிறுத்த வேண்டும் என பிரதமர் வாய் திறந்து கோரிக்கை வைக்கவில்லை. ஆனால், இந்த போரை நிறுத்த வேண்டும் என பிரதமர் வலியுறுத்த வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் சார்பாக இந்த கோரிக்கையை பிரதமருக்கு வைக்கிறோம். இவ்வாறு திருமாவளவன் கூறினார். Related Link களம் இறங்கினார் நடிகர் வடிவேலு