சென்னை, தியாகராயர் நகரில் குப்பைத் தொட்டியில் கிடந்த 45 சவரன் தங்கத்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்த தூய்மைப் பணியாளர் பத்மாவதியின், நேர்மையை பாராட்டி, தமது வீட்டிற்கு அழைத்து, தங்கச் சங்கிலியை பரிசாக அளித்தார் நடிகர் ரஜினிகாந்த்.தூய்மை பணியாளர் பத்மா சென்னை, திருவல்லிக்கேணி, பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர், 48 வயதான பத்மா. தூய்மைப் பணியாளரான இவர், தியாகராய நகரில், வண்டிக்காரன் பகுதியில் கடந்த மாதம் 11ஆம் தேதி பணியில் ஈடுபட்டிருந்தபோது, சாலையில் கிடந்த பையை எடுத்துப் பார்த்துள்ளார். அதில், 45 சவரன் தங்க நகைகள் இருந்தது. உடனே, அந்த நகைகளை பாண்டி பஜார் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். போலீசார் விசாரணையில், அந்த தங்க நகைகள் நங்கநல்லூரை சேர்ந்த பரமேஷ் என்பவருக்கு சொந்தமானது என தெரியவந்தது. மீட்கப்பட்ட தங்க நகைகள் உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது. குப்பையில் கிடந்த நகையை, போலீசாரிடன் ஒப்படைத்த தூய்மைப் பணியாளர் பத்மாவுக்கு பாராட்டுக்கள் குவிந்தன. முதல்வர் நேரில் பாராட்டு இந்த தகவல் அறிந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தூய்மை பணியாளர் பத்மாவை பாராட்டி ரூ.1 லட்சத்துக்கான காசோலையை அவரிடம் வழங்கினார். இதனை தொடர்ந்து, சென்னை மத்திய கோட்டத்தில் முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் அலுவலகம் சார்பில் ‘மை ஸ்டாம்பில்’ பத்மாவின் ஃபோட்டோவுடன் அஞ்சல் தலை வெளியிடப்பட்டு கவுரவப்படுத்தியது.ரஜினிகாந்த் பாராட்டு இந்நிலையில், இன்று நடிகர் ரஜினிகாந்த், தூய்மைப் பணியாளர் பத்மாவை நேரில் அழைத்து பாராட்டி கவுரவித்துள்ளார். மேலும், தங்கச் சங்கிலியையும் ரஜினிகாந்த் பரிசாக, பத்மாவுக்கு அணிந்து விட்டார். ரஜினியின் செய்தி தொடர்பாளர் தகவல்இதுகுறித்து, நடிகர் ரஜினியின் செய்தி தொடர்பாளர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், "முன்களப் பணியாளரான பத்மாவின் செயலை அங்கீகரித்து, அவருக்கு, நடிகர் ரஜினிகாந்த் தங்கச் சங்கிலி அணிவித்து கவுரவித்துள்ளார்,” என்று பதிவிட்டுள்ளார். Related Link பிப்.6ஆம் தேதி முதல் விருப்ப மனு - தவெக