நீலகிரி மாவட்டம் பந்தலூர் பகுதிகளில் கொட்டித்தீர்த்த கனமழையின் காரணமாக குடியிருப்பு மற்றும் கடைகளுக்குள் மழைநீர் புகுந்தது. ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை வெளுத்து வாங்கியது. இதன் காரணமாக அங்கு தாழ்வான இடங்களில் உள்ள குடியிருப்புகள் மற்றும் கடைகளுக்குள் மழைநீர் புகுந்து தேங்கியது. மேலும், சாலைகளில் செந்நிறத்தில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.