திருவள்ளூர் மாவட்டத்தில் செய்த கனமழை காரணமாக மீஞ்சூர் அருகே கல்பாக்கத்தில் நரிக்குறவர் இன மக்கள் வசிக்கும் பகுதியை மழைநீர் சூழ்ந்து, வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் பகுதியில், ஆண்டுதோறும் மழையின்போது தண்ணீர் சூழ்ந்து மிகுந்த சிரமம் ஏற்படுவதாக நரிக்குறவர் இன மக்கள் தெரிவித்தனர். பல வீடுகளில் மழைநீர் புகுந்ததால், எஞ்சிய வீடுகளில் 5க்கும் மேற்பட்ட குடும்பங்கள் ஒன்றாக இருக்கும் சூழல் உள்ளதாக நரிக்குறவர்கள் வேதனை தெரிவித்தனர்.