ராணிப்பேட்டை மாவட்டம் லாலாபேட்டை பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் பழைய கட்டட வளாகத்தை சுற்றிலும் மழைநீர் தேங்கி துர்நாற்றம் வீசுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். ஆரம்ப சுகாதார நிலையத்தில் புதிய கட்டடங்கள் திறக்கப்பட்டு அனைத்தும் மாற்றப்பட்ட நிலையில், பழைய கட்டடங்களுக்கு அருகாமையில் உள்ள கட்டடங்களிலும் கர்ப்பிணி பெண்களுக்கு பரிசோதனை செய்வதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், பழைய கட்டடங்கள் முழுவதும் தண்ணீரில் சூழ்ந்து காணப்படுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாகவும், தண்ணீரை அகற்றி மழைநீர் தேங்காமல் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.