சேலத்தில் இரவு பெய்த கனமழையால் கந்தம்பட்டி ரயில்வே சுரங்கபாதையில் தேங்கிய மழை வெள்ளத்தில் கண்டெய்னர் லாரி ஒன்று மூழ்கியது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இரவு பெய்த கனமழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. குறிப்பாக கந்தம்பட்டி ரயில்வே சுரங்கப்பாதைக்குள் தண்ணீர் தேங்கியது. இதனை அறியாத கண்டெய்னர் லாரி ஒன்று அவ்வழியாக சென்று வெள்ளத்தில் மூழ்கியது. 10க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கான போக்குவரத்து தடைப்பட்டதால் அப்பகுதி மக்கள் 25 கிலோமீட்டர் சுற்றி செல்லவேண்டிய நிலை ஏற்பட்டது. ஆபத்தை உணராத பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் ரயில்வே பாதையை கடந்து சென்றதால் அச்சம் ஏற்பட்டது.