திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே முடிகொண்டான் பகுதியில் உள்ள ரயில்வே சுரங்கப்பாதையில், ஒரு மாதத்திற்கும் மேலாக தேங்கி நிற்கும் மழைநீரை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என அப்பகுதி பொதுமக்களும், விவசாயிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர். ஒரு மாதம் கடந்தும் மழைநீர் வடியாததால், அவ்வழியாக செல்லும் பொதுமக்களும், மாணவ, மாணவிகளும் கடும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர்.