திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் மழைநீர் தேங்கி நின்றதால் நோயாளிகள் மற்றும் உறவினர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். அதோடு, மேற்கூரையில் இருந்து கசிந்த மழைநீர் மின்சார பெட்டிமீது பட்டதால் அச்சமடைந்த பொதுமக்கள், மருத்துவமனை நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.