அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் 90 சதவீத பணிகள் நிறைவடைந்த திருவாரூர் ரயில் நிலையத்தின் மேற்கூரை வழியாக மழைநீர் கொட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. சுமார் 8.69 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ரயில் நிலையத்தில் பிளாட்பார்ம் புதுப்பிப்பு பணிகள், ஓய்வு அறை, மேற்கூரை மேம்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு 90 சதவீதம் நிறைவடைந்த நிலையில், தெற்கு ரயில்வே பொது மேலாளரும் ஆய்வு செய்தார்.இந்நிலையில் மேற்கூரையில் இருந்து மழைநீர் கொட்டியதால், பணிகள் தரமாக மேற்கொள்ளப்படவில்லை எனவும் அதிகாரிகள் சரிவர ஆய்வு செய்யவில்லை எனவும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டினர்.