சிவகங்கை மாவட்டம் காரைக்குடி ரயில்வே காலனி அருகே ரயில்வே சுரங்க பாலத்தில் மழைநீர் நிரம்பி உள்ளதால் பொதுமக்கள் நீண்ட தூரம் சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. காரைக்குடியில் பெய்த கனமழையால் ரயில்வே காலனி, லட்சுமி நகர், பொன்நகர் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் ரயில்வே சுரங்க பாலத்தில் மழைநீர் தேங்கியது. இதனால் நீண்ட தூரம் சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டதால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர். மேலும் கல்யாணி நகரில் உள்ள குடியிருப்புகளையும் மழைநீர் சூழ்ந்ததால் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகினர்.