காரைக்கால் மாவட்டத்தில் பெய்த கனமழையால் குடியிருப்புகளை சூழ்ந்த மழை வெள்ளம் வீடுகளுக்குள்ளும் புகுந்ததால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகினர். கடல் போல் தேங்கியுள்ள நீரால் அத்தியாவசிய தேவைக்கு கூட வெளியே வரமுடியாமல் தவிக்கும் மக்கள், மழைநீரை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்தனர். மேலும் நிரந்தர வடிகால் வசதி ஏற்படுத்தி தரவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.