சென்னையில் மேற்கொள்ளப்பட்ட வடிகால் பணிகள் நன்றாக கைகொடுத்திருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.சென்னை கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் அமைக்கப்பட்டு வரும் நீர் நிலை பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு மேற்கொண்டார். இதனை தொடர்ந்து, பள்ளிக்கரணை நாராயணபுரம் ஏரியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளையும் பார்வையிட்டார். இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், மழைகாலங்களில் சென்னை மக்கள் பாதிக்கப்படாத வகையில் விரைவில் நிரந்தர தீர்வு காணப்படும் எனக் கூறினார்.