சென்னையில் இதுவரை ஆயிரம் கிலோ மீட்டருக்கு மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி துணை மேயர் மகேஷ் குமார் தெரிவித்துள்ளார்.மயிலாப்பூர் நாகேஸ்வர ராவ் பூங்கா, முசிறி சுப்பிரமணி சாலை, பி.எஸ்.சிவசாமி சாலையில் அமைக்கப்பட்டு வரும் வடிகால் பணிகளை ஆய்வு செய்த பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் நாகேஸ்வர ராவ் பூங்காவை அழகுப்படுத்தும் பணிகளை விரைவில் தொடங்கவிருப்பதாக கூறினார்.