ஆட்சியர் அலுவலக வளாகத்தில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில், மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவசௌந்திரவல்லி கலந்து கொண்டு விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார். இப்பேரணியில் மழை நீர் சேகரிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பதாகைகளை கையில் ஏந்தி விழிப்புணர்வு வாசகங்களை முழங்கியவாறு 50க்கும் மேற்பட்டோர் பங்கு பெற்றனர். எல்இடி திரையில் மழைநீர் சேகரிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சித்திரங்கள் திரையிடப்பட்டவாறு பெரிய வாகனம் பேரணியில் இடம் பெற்றது. ஆட்சியர் அலுவலகத்தில் துவங்கி, முக்கிய சாலைகள் வழியாக சென்று, மீண்டும் ஆட்சியர் அலுவலகத்தில் பேரணி முடிவடைந்தது.