விழுப்புரம் மாவட்டத்தில் இரவு பெய்த கனமழை காரணமாக புதிய பேருந்து நிலையத்தில் மழைநீர் தேங்கியதால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர். பேருந்துகள் செல்லும் வழியில் மழைநீருடன் கழிவுநீரும் தேங்கி நின்றதால், பேருந்தில் ஏறும் இறங்கும் பயணிகள் அவதியடைந்தனர். சிறு மழை பெய்தால் கூட மழைநீர் தேங்குவதால் உடனடியாக நடவடிக்கை எடுக்க பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.