திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக 20 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் சாய்ந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் வழுதளம் பேடு, ரெட்டம்பேடு, குருவி அகரம், மேல கழனி, சோம்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் பருவம் தப்பி பெய்த கனமழையால் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டன.பொன்னேரி சுற்றுவட்டார பகுதிகளில் 15000 ஏக்கரும், கும்மிடிப்பூண்டி சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 20,000 ஏக்கர் நெற்பயிரும் சேதமடைந்தன. ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்துள்ளதால் உரிய இழப்பீடு வழங்க விவசாயிகள் வலியுறுத்தினர்.