மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே இழப்பீடு கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் குண்டுகட்டாக கைது செய்தனர். தரங்கம்பாடி தாலுகாவிற்கு உட்பட்ட எரவாஞ்சேரி, இலுப்பூர், உத்திரங்குடி உள்ளிட்ட பகுதிகளில் பருவம் தவறி மழை பெய்துள்ளது. இதனால் அங்கு பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் தண்ணீர் மூழ்கி சேதமடைந்தன. இதனால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு வழங்காததை கண்டித்து சங்கரன்பந்தல் கடை வீதியில் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை குண்டுகட்டாக கைது செய்தனர்.