தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதைடுத்து, தேனி மாவட்டத்தில் தமிழக கேரள எல்லையில் உள்ள போடி மெட்டு மலைச்சாலையில் பலத்த காற்றுடன் சாரல் மழை பெய்து வருகிறது. 17 கொண்டை ஊசி வளைவுகள் கொண்ட மலைச்சாலையில், காத்தாடி பாறை மற்றும் பிஸ்கட் பாறை பகுதியில் பலத்த காற்று வீசுவதால், சுற்றுலா பயணிகள் அப்பகுதியில் வாகனங்களை நிறுத்தவோ, செல்பி எடுக்கவோ கூடாது என குரங்கணி காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இரவு நேரங்களில் வாகனங்களில் வருபவர்கள் மிகுந்த கவனத்துடன் வரவேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.