ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் தீவுப்பகுதியில் இரண்டாவது நாளாக சூறைகாற்றுடன் கூடிய மழை பெய்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. ராமேஸ்வரம் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்ட நிலையில், இரண்டு நாட்களாக காற்றுடன் கூடிய மழை பெய்தது. இதனால் குளிர்ச்சியான சூழல் நிலவி வந்தாலும், தொடர் மழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.