விழுப்புரத்தில் பலத்த காற்று மற்றும் இடி மின்னலுடன் பெய்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். விழுப்புரம் நகரை சுற்றியுள்ள முண்டியம்பாக்கம், சாலாமேடு, பில்லூர், தளவானூர், ஜானகிபுரம், உள்ளிட்ட பகுதிகளில் காலை முதல் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்ட நிலையில் மாலை நேரத்தில் திடீரென பெய்த பலத்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.