கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பலத்த காற்றுடன் மழை பெய்தது. கடந்த இரண்டு மாதங்களாக கோடை வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், காரமடை, சிறுமுகை உள்ளிட்ட இடங்களில் மழை கொட்டி தீர்த்தது. வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் நிலவியதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.