திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூர் அருகே தொடர் கனமழை காரணமாக குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்தது. தவிட்டுப்பாளையம் பகுதியிலுள்ள கணபதி நகரில் சுமார் 20க்கும் மேற்பட்ட வீடுகளை மழைநீர் சூழ்ந்துள்ளதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். இதனால் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் ஜே.சி.பி. எந்திரம் கொண்டு மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் சூழலில், நவடிக்கையை தீவிர படுத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.