ராமநாதபுரம் மாவட்டத்தில் பெய்த கன மழையால், ராமேஸ்வரம் மண்டபம் பகுதி கடும் சேதத்தை சந்தித்தது. வேதாளை மீனவ கிராமத்தை மழை நீர் சூழ்ந்ததால் மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் தவித்தனர். மேலும், வீடுகளுக்குள்ளும் மழைநீர் புகுந்ததால் மக்கள் செய்வதறியாது திகைத்தனர்.அத்தியாவசிய பொருட்களை வாங்க முடியாமல் மக்கள் அவதி;ராமநாதபுரம் மாவட்டத்தில் பெய்த கனமழையால் மண்டபம் பகுதியை மழை நீர் சூழ்ந்ததால் கலைஞர் நகர் கடல்போல காட்சியளித்தது. இதனால், 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தங்களது அத்தியாவசிய தேவைக்கான பொருட்களைக் கூட வாங்க முடியாமல் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.